இன்றைய தேர்வு பதிவின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்த
இழை தொடங்கியதும் எனக்கும் என்னுடைய இணையச் சகோதரர் ஒருவருக்குமிடையில்
நடந்த உரையாடலின் சாரத்தை விளக்கமான பதிவாக எழுத நினைத்தேன்.. ஆனால் பதிவாக
எழுதுவதை விட உரையாடலை அப்படியே தந்தால் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்
என்று புலப்பட்டது. அதன் விளைவு இந்த பதிவு.
எங்கள் பேச்சு
வழக்கிலும் தமிழகத்தின் மற்ற பாகங்களிலும் உபயோகத்தில் இருக்கும்
வார்த்தைகளான நாங்கள் , நீங்கள், எங்கள் என்ற வார்த்தைகளை ஈழத்தமிழர்
உபயோகிக்கும் விதத்திற்கும் அந்த உரையாடலில் பங்குபெறும் தமிழக தமிழர் அதை
எடுத்துக் கொள்ளும் விதத்திலும் பல தடவை எனக்குள்ளும் என்னுடன் உரையாடிய
தமிழக தமிழர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல் தம்பி பாலாஜி
பாஸ்கரன் தன்னுடைய நண்பர்களான ஈழத்தமிழர் ஒருவரின் வீட்டுக்கு விசிட் போன
போது இதே போல் நாங்கள் நீங்கள் எங்கள் வார்த்தைகளையிட்டு குழம்பிப் போனார்.
ஒரு நாள் அவருக்கும் எனக்குமிடையில் நடந்த “ நாங்கள், நீங்கள் , எங்கள்”
என்ற வார்த்தைகள் பற்றிய உரையாடலை அப்படியே இங்கு தருகிறேன். நீங்களும்
குழம்பலாம் அல்லது தெளிவடையலாம். smile emoticon smile emoticon
******************
நாங்கள் - We / We are/ நாங்க
நீங்கள் - You / நீங்க
எங்கள் - Our /நம்ம
எங்களுக்கு- Us / நமக்கு
**************************
Balaji Baskaran :
நாங்கள் எங்கள் இதை
எப்படி பயன்படுத்துகிறீர்கள்
என சொல்லுங்கோ
எங்களுக்கும் உங்களுக்கும் ரொம்ப குழப்பம்
இதன் பயன்பாட்டில்
Swathi Swamy :
புரியவில்லை தம்பி
நாங்கள் - We
எங்கள் - Our
இந்த இரண்டையும் நீங்களும் அப்படித் தானே பயன்படுத்துகிறீர்கள்?
Balaji Baskaran:
haa haa haa
ஆமாக்கா
Swathi Swamy:
அப்புறம் என்ன?
Balaji Baskaran:
உங்க இலங்கைத் தமிழர்கள் பேச்சுக்கும் எங்க பேச்சுக்கும்
உள்ள வேறுபாடு சொல்றேன் கேளுங்க
Swathi Swamy:
சொல்லுங்கோ smile emoticon
Balaji Baskaran:
நீங்க ,நான், மாமா எல்லாரும் ஒரு இடத்துல பேசிக்கிட்டு இருக்கோம்
சரியா?
Swathi Swamy :
ஓகே
Balaji Baskaran:
நாங்கள் சினிமாவுக்குப் போவோம்னு நீங்க சொல்றீங்க
Swathi Swamy:
சரி
Balaji Baskaran:
அப்படினா நீங்க ரெண்டு பேரு மட்டும் போறீங்கனுதான் எனக்குப் புரியும்
உங்க மொழில மூனு பேரும் போவோம் என்று சொல்வீர்கள்
Swathi Swamy:
நான் நீங்க.ள் அவர் இருக்கும் போது எல்லாரையும் சேர்த்து தான் நாங்கள்
என்கிறோம்.. அதாவது உங்களையும் எங்களோடு சேர்த்தே சொல்கிறோம்
Balaji Baskaran:
ம்ம்ம்ம்
எங்களுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும்னு தான் புரியும்
இதையே நாங்க எப்படி சொல்லுவோம் தெரியுமா?
Swathi Swamy:
ம்ம் இப்ப புரியுது.. சரி அப்ப நீங்கள் எப்படி அதை சொல்வீர்கள்?
சொல்லுங்கோ
Balaji Baskaran:
நாம சினிமாவுக்குப் போவோம்
Swathi Swamy:
smile emoticon நாம என்றால் நாங்கள் தானே?
Balaji Baskaran :
ஆமாக்கா
ஆனா நீங்க நானு உங்களுக்கு வேண்டியவர் இருக்கும் போது நாங்கள் என்று நீங்க சொல்லும் போது
நீங்கள் ரெண்டு பேர் மட்டும்னு தான் புரியும்
Swathi Swamy:
சரி.. இப்ப நான், நீங்கள், பிராணநாதர், ஜோ எல்லாரும் ஒரு இடத்தில் இருக்கிறோம்..
Balaji Baskaran :
ஹா ஹா ஹா இதனால ரொம்பகுழம்பியிருக்கேன் தேனுசா வீட்டுல
Swathi Swamy:
நான் உங்கள் நாலு பேரையும் ஒருமித்து சுட்டுவது என்றால் நீங்கள் என்று சொல்வேன் அல்லவா?
அதை எப்படி சொல்வீர்கள்? நீங்க ந்னு தானே?
Balaji Baskaran :
நீங்கள்தான்
Balaji Baskaran:
எங்கள் பற்றி சொல்றேன்
கேளுங்க
நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
Swathi Swamy :
ஒரு தடவை நான் தமிழ் பிரவாகம் குழுமம் தொடங்கின புதுசுல எங்கள்
குழுமம் , எங்கள் குழுமம் என்று எழுதினதை ஒருவர் கண்டித்து எழுதினார்..
அதென்ன இத்தனை பேரையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குழுமம் உங்களோடது
மட்டும்ன்னு சொல்லுறீங்க என்று
ஏன் என்று இன்று வரை புரியவில்லை
Balaji Baskaran :
அதேதான்
பெரிய வேறுபாடு இருக்குக்கா
என்னடா நம்மள வச்சிக்கிட்டே இப்படி சொல்றாங்களேனு தோணும்
சிக்கன் மேட்டருக்கு வாரேன்
எங்கள் பற்றி சொல்றேன் கேளுங்க நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
இங்க ஸ்வாதி சொல்றாங்க
எங்களுக்கு கடைசியா சிக்கன் வச்சிருக்காங்க
அப்படினா நீங்க சொல்றது 4 பேருக்கும் கடைசியா வச்சிருக்காங்க
சரியா?
Swathi Swamy:
ஆமாம்
Balaji Baskaran :
எங்களுக்குப் புரிவது, உங்க ரெண்டு பேருக்கு மட்டும் கடைசியா வச்சிருக்காங்க
இதையே நாங்க எப்படி சொல்லுவொம்னா
நமக்கு சிக்கன் கடைசியா வச்சிருக்காங்க
Swathi Swamy:
ஓஒ
Balaji Baskaran:
நாங்கள் - நாம் வேறுபாடு
எங்கள் - நம் வேறுபாடு
Swathi Swamy:
அதான் அதை எப்படி விளக்கமாக எழுதுவது என்று ரொம்ப பிரச்சினையா
இருக்கிறது. இது பற்றி கணேசன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கலந்து பெசி தான்
விளக்கமாக எழுத வேண்டும்.
Balaji Baskaran :
சரிங்க அக்கா
உங்க பேச்சுல நீங்க நல்லாத்தான் பேசுவீங்க
ஒரு அறையில் படுத்திருக்கோம்
கொசு கடிக்குது
காலைல சொல்றீங்க
ஸ்வாதி : “எங்களுக்கு கொசு கடிச்சது”
பாலாஜி : “ஐய்யே, அப்ப எங்களுக்கு தாலாட்டா பாடுச்சு, எங்களையும்தான் கடிச்சிச்சு”
Swathi Swamy :
நீங்க நினைப்பீங்க எங்களுக்கும் தானே கொசு கடிச்சுதுன்னு
ஹஹஹஹஹ்
Balaji Baskaran:
ஹா ஹா ஹா
நாலு பேரும் வேர்வையில் நனைஞ்சு போயிட்டோம் கரண்ட் இல்லாம
Swathi Swamy:
ஆனா அவங்க உங்களையும் சேர்த்து தான் சொல்றாங்க
நமக்கு கொசு கடிச்சிருச்சுன்னு சொல்லனும் உங்க வழக்கில
Balaji Baskaran :
நாங்கள் வேர்வையில் நனைஞ்சிட்டோம்னு எங்கிட்ட சொன்னா
அப்ப நான் மட்டும் குளிர்ல நடுங்கினேனானு தோனும்
Swathi Swamy:
smile emoticon
Balaji Baskaran:
நம்மை விட்டு மூன்றாம் பேருடன் பேசும் போது நாங்கள் எங்கள் சரியா இருக்கும்
Swathi Swamy :
விளங்குது... ம்ம்ம்ம்
Balaji Baskaran:
நமக்குள்ளே பேசும் போது நாம் நம் சரியா இருக்கும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நன்றி அக்கா
Swathi Swamy:
smile emoticon நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேணும்
இதை எப்படி எல்லாருக்கும் விளங்கிற வகையில எழுதி முடிக்கிறது என்பது தான் இப்ப பிரச்சினையே எனக்கு..
பேசாமல் உக்களுடன் இப்ப பேசினதையே காப்பி & பேஸ்ட் செய்து போட்டுடலாம் என்று நினைக்கிறேன் smile emoticon
Balaji Baskaran:
சரிங்க அக்கா
பட் டிங்கரிங் பார்த்துப் போடுங்க
Swathi Swamy:
ஓஒமோம்..
Balaji Baskaran:
நம்மை விட்டு மூன்றாம் நபரிடம் பேசும் போது நாங்கள் எங்கள்
நமக்குள்ளே பேசும் போது நாம் நம்
இது எங்கள் வழக்கம்
உங்களுடையது
நாங்கள் எங்கள்
அதான் குழப்பம்...
Swathi Swamy :
ஆமாம்.
Balaji Baskaran :
இன்னொரு நண்பரிடம் கேட்குறேனு சொன்னீங்களே
கேட்டுட்டு விளக்கமா போடுங்க
நம்ம பதிவை பார்த்து மேற்கொண்டு மத்தவங்க குழம்பிடாம smile emoticon
Swathi Swamy :
அதே தான்
நன்றி தம்பி. வணக்கம்.
****************************
இந்த உரையாடல் புரிய வைப்பது என்னவென்றால்
உதாரண வாக்கியங்களாக ..
1) நாங்கள் சினிமாவுக்கு போகப் போகிறோம்.
(நாம சினிமாவுக்கு போக போகிறோம்.)
2) எங்களை நுளம்பு நல்லா கடிச்சிட்டுது.
(நம்மை கொசு நல்லா கடிச்சிடிச்சு)
3) எங்களுக்கு பசிக்குது
(நமக்கு பசிக்கறது)
அதாவது :
ஈழத் தமிழில் :
நான் + நீ = நாங்கள் அல்லது நாம்
தமிழகத் தமிழில் : நான் + என்னைச் சார்ந்தவர்கள் மட்டும் = நாங்கள்.
ஈழத்தமிழில் : என்னுடையது + உன்னுடையது = எங்களுடையது. அல்லது நமது
Friday, December 11, 2015
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்
உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல்
வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல
வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும்
கொண்டிருக்கிறது,.
சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின் அடையாளங்களில் ஒன்றாகவே ஒன்றிப்போயிருக்கின்றன.
உணவின் தன்மையும், வகையும் மனிதர்களின் வித்தியாசப்படுத்தலில் ஒரு அங்கமாக திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.
ஈழத் தமிழ் மக்களிடையே ஒரு அடையாளமாக அல்லது பன்னெடுங்காலமாக பாவனையிலிருப்பவையாக ஒரு சில உணவுகள் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் நமது சம்பிரதாயங்களுடனோ அல்லது சமய வழிபாட்டுடனோ அல்லது கலாச்சாரத்துடனோ சம்மந்தப்பட்டவையாக நாம் தொடர்ந்து சந்ததி சந்ததியாக கடத்திவரும் விசயங்களில் ஒன்றாக இருக்கின்றன.
பச்சை இறைச்சியை வேட்டையாடி தின்ற அன்றைய மானுடத்தின் உணவு உட்கொள்ளலிருந்து இன்றைய சமைத்தல் முறை மூலம் உட்கொள்ளும் நவீன மாற்றங்கள் பல கண்ட பின்னாலும் நாம் எமது பாட்டி, பூட்டி காலத்தில் சமைக்கப்பட்ட அதே உணவுகளுடன் தான் எங்கள் சந்ததியினருடன் பயணிக்கிறோம். எத்தனையோ புது புது இடங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அந்த நாட்டின் பருவ கால , சூழல் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுகளுடன் வாழ்கையை செலுத்த வேண்டிய கட்டாய்த்திலிருப்பினும் கூட நமது சொந்த ஊரின் சமையல் முறையை எப்பாடுபட்டாவது இருக்கும் ஊரின் சூழலுக்குள் நமக்கு நாமே கொண்டு வந்து விடுகிறோம். எத்தனையோ வகை வகையான புதிய புதிய சமையல் வகைகளை தெரிந்து கொண்டாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நாம் சாப்பிட்டு வாழ்ந்த உணவு வகைகளையே பிராதானப்படுத்துகிறோம்.
அப்படி எம்முடன் சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும் பல வகையான உணவு வகைகளில் “கூழ்” என்பது மிக பிரதானமான உணவு எனலாம்.
கூழ்களில் பல வகையான கூழ் வகைகள் இருந்தாலும் மிகப் பிரதானமாக இரண்டு விதமான கூழ் ஈழத்தில் முக்கிய இடத்தை கொண்டிருக்கின்றன.
1 ) ஆடி மாதப் பிறப்பில் கோவில்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஆடிக் கூழ் .
2) ஒடியல் கூழ்.
தை மாசப் பிறப்பை தைப் பொங்கலாகவும், சித்திரை மாசப் பிறப்பை சித்திரை புத்தாண்டாகவும் கொண்டாடுவது போல் ஆடி மாதப் பிறப்பை ஆடிப்பிறப்பாக கொண்டாடுகிறோம் என்பது மட்டும் தெரியும். ஆனால் அதற்கான காரணமோ பாரம்பரிய கதைகள் எதுவுமோ எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
ஆடி மாதத்தில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யுமாம். அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர் என்று என் தோழி நிவேதா உதயன் கூறுகிறார். அது சரியான காரணமாகவே தெரிகிறது.
ஆடிக் கூழ் இனிப்பானது. அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள். ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள்.
வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது.
ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள். அந்த மாதத்திலேயே அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது. அதனால் தானோ என்னமோ கோவில்களில் ஆடி மாதத்தில் இந்த கூழ் காய்ச்சி வழங்குகிறார்களோ என்னமோ...
ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பாடல் பிரபலமானது.
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
********
ஆடிக் கூழ் செய்முறை :
ஆடிக்கூழ்...செய்முறை:
தேவையான பொருட்கள்:
அரிசிமா - 1/2 கப்
பயறு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 2 கப்
பனங்கட்டி - 3/4 கப்
தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்
கொஞ்சூண்டு மிளகுதூள்
செய்முறை:
பயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
2 கப் தணீர கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.
பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.
மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு / கொஞ்சூண்டு மிளகுதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ஆடிக்கூழ் தயார். சுடச்சுட அருந்தவும்
2) ஒடியல் கூழ்
*********************
இது ஆடிக் கூழைப் போல் அல்லாது கடலில் வாழ் பிராணிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கும் கூழ் .
பனங்கிழங்கை அவித்து காய வைத்தால் கிடைப்பது புளுக்கொடியல்.
பனங்கிழங்கை அவிக்காமல் காய வைத்து எடுப்பது ஒடியல். இந்த ஒடியலை மாவாக திரித்து மச்சக் கூழ் அல்லது ஒடியல் கூழ் செய்வார்கள்.
இதன் செய்முறை இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.
ஒடியல் கூழ் செய்முறை :
http://www.vavuniyanet.com/news/43139
தேவையானவை
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
****
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.
இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.
நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.மிகவும் நல்லது.
ஒடியல் கூழ் குடித்தால் அரை மணியிலிருந்து ஒரு மணி வரைக்கும் நீர் அருந்தக் கூடாது என்பார்கள். அப்படிக் குடித்தால் வயிற்றுக் குழப்படியாகிவிடுமாம்.
ஈழத்தில் நமது வீடுகளில் ஒடியல் கூழ் செய்தால் அநேகமாக 15 அல்லது 20 பேருக்கு போதுமானதாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் உறவனர்கள், அயலில் இருக்கும் நண்பர்கள் என்று வீடு களை கட்டும்.
கூழ் விருந்து (பார்டி) அது! அது ஒரு கனாக் காலம்!!
கூழ் செய்வது ஒரு கோலகலமான நாளாக இருக்கும். பொதுவாக விருந்து என்பது ஏதேனும் விசேச தினத்திலோ அல்லது விசேசமான சடங்கிலோ தான் நடக்கும் . ஆனால் ஒடியல் கூழ் விருந்து என்பது
எந்த விசேசம் என்றில்லை...எந்த சடங்கு என்ற காரணம் இல்லாமல் உறவினர்களையும்ம் நண்பர்களையும் ஒன்று கூட வைக்கும் நாளாக்கி விடும்.
ஒடியல் கூழ் செய்வது எத்தனை சிரத்தையானதோ , எத்தனை சுவையானதோ அத்தனைக்கத்தனை அதை உட்கொள்ளும் முறையிலும் இருக்கும் . கூழ் அல்லது கஞ்சி அல்லது கள்ளு குடிக்கவென்றே நம்மூரில் “பிளா” என்ற பனை ஓலைக் கலயம் வேயப்படும். இந்த பிளாவில் குடித்தால் தான் கூழ் குடித்த திருப்தியே ஏற்படும். அதே போல் சிறுவர்களுக்கு பலா மரத்து இலையைக் கோலி கரண்டி மாதிரி செய்து தருவார்கள். கும்பா மாதிரியான கோப்பையில் கூழை ஊற்றி தருவார்கள். அந்த பலா இலைக் கரண்டியால் கூழை அள்ளி குடிப்போம்.
ஈழத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் இன்று வரை அழியாமல் தமிழர்கள் போகுமிடமெல்லாம் கூடவே போன உணவு வகைகளில் கூழ் மிகவும் பிரதானமான ஒன்று. இது எமது வாழ்கையின் சிறுபிராய நினைவுகளையும், எமது வாழ்கை முறையில் ஒன்று கூடலையும், பகிர்ந்து உண்ணுதலின் சிறப்பையும் தன்னுடைய அடையாளமாக வைத்திருக்கும் உணவு வகை என்றால் மிகையாகாது.
இதே போல் பலரோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் இன்னொரு வகை நிலாச்சோறு. அதை பிறிதொரு நாளில் பார்க்கலாம்.
நன்றி : http://www.vavuniyanet.com/news/43139 & விக்கி பீடியா (படங்கள், சமையல் குறிப்புகள்)

ஆடிக் கூழ்
***************
ஆடி மாசத்தில் எந்த நல்லகாரியமும் நம்மூர்களில் நடப்பதில்லை.
இறந்தவர்களுக்கான ஆன்ம சாந்தி கிரியைகளை ஆடி அமாவாசையில் கீரிமலை போன்ற
புனித நீர் நிலைகளில் உறவினர்கள் போய் செய்வது வழக்கம்.***************

Thursday, December 10, 2015
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்
சொதி
சொதி,/ ஆணம் (மட்டகளப்பு.பேச்சுத் தமிழ்) (பெயர்ச்சொல்)
ஈழத்து சமையலில் உணவுகளின் பெயர்கள் கூட சிலது வித்தியாசமானவை; எனக்கு
நன்றாக நினைவு இருக்கிறது சன் தொலைக்காட்சியில் கிராமத்து விருந்து என்ற
சமையல் நிகழ்ச்சியில் பரவை முனியம்மா அவர்கள் கிராமத்து சமையல் குறிப்புகள்
தருவார். அப்போது ஒரு நாள் கோவக்காய் பால் கறி செய்து காட்டினார். அந்த
குறிப்பினூடாக அவர் சொன்ன இன்னொரு விசயம் “கோவாக்காயில் மாத்திரமே பால்கறி
செய்யக் கூடியதாக இருக்கும். கத்தரிகாய் போன்றவற்றில் பால்கறியே செய்ய
முடியாது என்று சொன்னார்”. ஆனால் எங்கள் வீடுகளில் ஆட்டிறைச்சிக்
குழம்புக்கு காம்பினேஷனே கத்தரிக்காய் பால் கறி தான் முதல் தேர்வாக
இருந்து வருகிறது கால காலமாய்.
இது போல சொதியும் எமது சமையலில் மிக முக்கியமானது. தமிழ் நாட்டு மக்கள்
சமையலில் நான் அதை கண்டதில்லை.ஆனால் இணையத்தில் தேடிய போது திருநெல்வேலி
மாவட்டத்தில் திருமண விருந்துகளில் சொதி பரிமாறப்படுவதாக படித்தேன்.
நெல்லை சீமை சொதியின் சமையல் செய்முறை எம்மவர்களின் சொதியுடன் கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. (http://9-west.blogspot.com/2008/08/blog-post_22.html)
மாப்பிள்ளை சொதி என்று இன்னொரு வகைச் சொதிக் குறிப்பும் பார்த்தேன். (http://www.eegai.com/blog/mappillai-sodhi-recipes-2.html)இந்த சொதியில் பாசிப்பருப்பு கூட போடுகிறார்கள் .
நம்மவர்கள் செய்யும் சொதி குழம்பு போல் கெட்டியாக இருக்காது. நீர்த்தன்மை அதிகமானதாக இருக்கும்.
ஈழத்தில் தமிழில் சொதி என்றும் சிங்கள பிரதேசங்களில் ஹொதி என்றும் சொல்லப்படுகிறது. சொதிக்கு “ஆணம் “ என்று இன்னொரு பெயரும் உண்டு.
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி , உப்பு , சிட்டிகை மஞ்சள் பொடி எல்லாம் சேர்த்து கப்பி பாலில் கொதிக்க விட்டு மிளகாய் வெங்காயம் அவிந்ததும் இரண்டாம் பால் , கடைசியில் முதலாம் பால் விட்டு இறக்கி ஆறினதும் எலுமிச்சம் புளி பிழிந்து விட வேண்டும். இது தான் சாதரணமாக பால் சொதி செய்யும் முறை. வாசனைக்கு கடுகு, கறிவேப்பிலை தாளித்தும் போடுவார்கள்.
அல்லது கொஞ்சம் புளி+சிவப்பு வெங்காயம்+உப்புக்கலந்து பிசைந்து கொஞ்சம் வெந்தயம்+கறிவேப்பிலை போட்டு தேவைக்கு அளவாக தண்ணீர் ஊற்றிக்கொதிக்க விட வேண்டும். நன்றாகக்கொதித்ததும் ' அடுப்புச்சூட்டை குறைத்துவிட்டு அல்லது நிற்பாட்டிப்போட்டு 'பால்விட்டு" கரண்டியால் 'ஆத்திவிட்டுவிட வேண்டும்.
பிறகு...'தாளிதம்' சேர்த்தால்...சொதி ரெடி!
அதே சொதியில் கப்பி பாலில் மீன் தலை , மீன் துண்டம் போட்டால் மீன் சொதி, கருவாடு போட்டால் கருவாட்டு சொதி, உருளைக் கிழங்கு போட்டால் உருளைக்கிழங்கு சொதியாகிவிடும் .
எங்கள் ஊரில் முரல் மீன் சொதி மிகப் பிரசித்தி பெற்றது. உடன் முரல் மீன் போட்டு செய்த சொதியுடன் அரிசி மா பிட்டும் சாப்பிட்டால் அப்படி ஒரு சுவை.
மாதகல் முரல் சொதியும் புழுங்கல் அரிசி சோறும்
இதை இடியப்பம், புட்டு, சோறு போன்ற உணவு வகைக்கு விட்டு பிசைந்து சாப்பிடுவோம். எங்கள் சமையலின் கறி வகைகள் குழம்பாக இருந்தாலும் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். அந்த கெட்டியான கறிகளுடன் இடியப்பம், புட்டு போன்றவை சாப்பிட்டால் தொண்டையை அடைக்கும்.. அதனால் சொதி நிறைய விட்டு கொஞ்சம் நீர்பதமாக பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும். குழந்தைகள் உறைப்பான காரமான உணவு வகை சாப்பிட மாட்டார்கள்..அவர்களுக்கும், சரியாக பல் முளைக்காத குழந்தைகளுக்கும் , பல் விழுந்த தாத்த பாட்டிக்கும் உணவை மென்மையாக்கி பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும்.
அது மட்டுமல்ல காரமான கறிகளினால் தொண்டையிலும் குடலிலும் ஏற்படவல்ல எரிவிலிருந்தும் , புண்ணிலிருந்தும் தடுக்கும் ஒரு சமநிலை உணவாக சொதியை எடுத்துக் கொள்ளலாம்.
உதாரண வாக்கியங்கள்:
1) இரவைக்கு சொதியும் இடியப்பமும் தான் சாப்பாடு.
(இரவு உணவாக இன்று இடியப்பமும் சொதியும் இருக்கும்)
2) புட்டு தொண்டைக்குள் அடைக்குது. கொஞ்ச சொதி இருந்தால் நல்லா இருக்கும்.
3) கறி ஒண்டுமில்லாட்டில் ரெண்டு உருளைக் கிழங்கை சீவி பொரிச்சு எடுத்து சொதியோட சாப்பிடலாம்.
( சாதத்துக்கு குழம்பு எதுவும் இல்லையென்றால் உருளைக்கிழங்கு வறுவலும் சொதியும் சேர்த்து சாப்பிடலாம்)

அராலிக்கடல் பாலைமீன் பாற்சொதி வெள்ளைப்பச்சை அரிசியில் சமைத்த சோறு பொன்னாலைக்கடலில் பின் நேரத்து
சினாது மீன் குழம்பு சொதி இடியப்பம் என்று சொதியும் அதன் காம்பினேஷனும் எங்கள் ஊரின் சமையல் சுவைக்கு பெயர் போனவை. சொதியின் புளிப்பு தன்மையை அதிகப்படுத்த தக்காளி, மாங்காய் துண்டங்களும் சேர்ப்பதுண்டு.
இதை இடியப்பம், புட்டு, சோறு போன்ற உணவு வகைக்கு விட்டு பிசைந்து சாப்பிடுவோம். எங்கள் சமையலின் கறி வகைகள் குழம்பாக இருந்தாலும் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். அந்த கெட்டியான கறிகளுடன் இடியப்பம், புட்டு போன்றவை சாப்பிட்டால் தொண்டையை அடைக்கும்.. அதனால் சொதி நிறைய விட்டு கொஞ்சம் நீர்பதமாக பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும். குழந்தைகள் உறைப்பான காரமான உணவு வகை சாப்பிட மாட்டார்கள்..அவர்களுக்கும், சரியாக பல் முளைக்காத குழந்தைகளுக்கும் , பல் விழுந்த தாத்த பாட்டிக்கும் உணவை மென்மையாக்கி பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும்.
அது மட்டுமல்ல காரமான கறிகளினால் தொண்டையிலும் குடலிலும் ஏற்படவல்ல எரிவிலிருந்தும் , புண்ணிலிருந்தும் தடுக்கும் ஒரு சமநிலை உணவாக சொதியை எடுத்துக் கொள்ளலாம்.
உதாரண வாக்கியங்கள்:
1) இரவைக்கு சொதியும் இடியப்பமும் தான் சாப்பாடு.
(இரவு உணவாக இன்று இடியப்பமும் சொதியும் இருக்கும்)
2) புட்டு தொண்டைக்குள் அடைக்குது. கொஞ்ச சொதி இருந்தால் நல்லா இருக்கும்.
3) கறி ஒண்டுமில்லாட்டில் ரெண்டு உருளைக் கிழங்கை சீவி பொரிச்சு எடுத்து சொதியோட சாப்பிடலாம்.
( சாதத்துக்கு குழம்பு எதுவும் இல்லையென்றால் உருளைக்கிழங்கு வறுவலும் சொதியும் சேர்த்து சாப்பிடலாம்)
Saturday, November 14, 2015
தினம் ஒரு ஈழத் தமிழ் சொல்.
மச்சாள் - மாமா மகள், சகோதரன் மனைவி.
மச்சான் - மாமா பையன், தங்கை கணவர் .
ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு வகையில் நேசிப்புக்குரியதாயும், மதிப்புக்குரியதாயும் இருப்பினும் மாமன் அல்லது மாமி மகன், மகள் உறவுகள் கால காலத்துக்கும் இனிமையானவையும் அலாதியானவையுமாகும். உறவு முறைகளை சுட்டும் சொற்களில் மச்சாள் , மச்சான் என்பது ஈழத்து பேச்சு
வழக்கில் அத்தை அல்லது மாமாவின் மகள் , மகனை குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகளாகும்.
அக்கா கணவரை அத்தான் என்று அழைக்கும் வழக்கம் எங்களிடம் உண்டு. அதே போல் தங்கை கணவரை மச்சான் என்று அழைக்கிறோம்.
அதே போல் அத்தை பெண்ணையும் சகோதரன் மனைவியையும் மச்சாள் என்று அழைக்கிறோம். அண்ணன் மனைவியை அண்ணி என்றும் அழைக்கும் வழக்கம் இருந்தாலும் மச்சாள் என்பதே பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் வார்த்தை எனலாம்.
இரண்டு மூன்று சகோதரர்கள் இருந்து அவர்களுக்கு மனைவிமார் வரும் பட்சத்தில் அவர்களுடைய வயது அல்லது அவர்கள் கணவரின் வயதை வைத்து பெரிய மச்சாள் , சின்ன மச்சாள் , குட்டி மச்சாள் என்றோ அல்லது அந்த மச்சாளின் பெயரை சேர்த்தோ அழைப்போம்.
உதாரணம் : ஸ்ரீதேவி என்பவர் தம்பி உதயனின் மனைவி. நிறைய தம்பிமார் இருப்பதால் அவரை பெரிய மச்சாள் என்றோ சின்ன மச்சாள் என்றோ குறிப்பிட்டு அழைக்க இயலாது.. அத்தகைய சூழலில் ஸ்ரீதேவி மச்சாள் அல்லது தேவி மச்சாள் என்று அழைப்போம். அதே போலவே மச்சானுக்கும்...
உதாரண வாக்கியங்கள் :
1) இண்டைக்கு என்ர ஸ்ரீதேவி மச்சாளுக்கு பிறந்தநாள்.
(இன்று என்னுடைய தம்பிமனைவி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள்)
2) எங்கட பெரிய மச்சாள் தான் எங்கட வீட்டில அம்மாவுக்கு அடுத்தபடி..
(எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவுக்கு அடுத்து அண்ணி தான் எல்லாமுமே)
3) என்ர மச்சான் இருக்கிறவரை எனக்கு எந்த பயமுமில்லை
(என்னுடைய மைத்துனன் இருக்கும் வரை எனக்கு எந்த கவலையுமில்லை)
4) எங்கட மச்சான் / அத்தான் வீட்டுக்கு வந்த நேரம் எல்லாம் நல்லபடியாக நடக்குது
(எங்கள் மைத்துனர் வீட்டுக்கு வந்த வேளை எல்லா விஷயங்களும் சுபமாக நடக்கிறது)
பிற்குறிப்பு:
எம்மவர்கட்கு! இதில் ஏதும் திருத்தம் வேண்டுமா என்று பார்த்துச் சொல்லுங்கள்....நாங்கள் எங்கள் குடும்பத்தில் வயதில் மூத்த மாமா பையனையும் அக்கா கணவரையும் அத்தான் என்றும் வயதில் குறைந்த மாமா மகனையும் தங்கை கணவரையும் மச்சான் என்றும் கூப்பிடுவோம்.. அதை வைத்தே இந்த பதிவை எழுதியிருக்கிறேன்... உங்கள் அபிப்பிராயம் என்ன?

உறவுகளை இழந்தோம்; வீடு மனை வளவு சொத்து என்று எல்லாவற்றையும் துறந்து வந்தோம்;நாட்டையும் பறிகொடுத்தோம்.ஆனாலும் எம்முடன் கூடவே நாம் சுமந்து வந்தது எமது மொழியை மட்டும் தான். ஆனால் புலம் பெயர் தேசங்களில் சடுதியில் இயந்திரமயமாகிப் போன வாழ்கையோடு போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாத நிலையில் கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு கை கழுவிவிட்டு நின்று பேசக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.
அப்படி எங்கே ஓடுகிறோம் என்ற இலக்கு எவருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை... எனது மொழியில் எனக்கு பேசும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறேன்.. கூட இருந்து பேச ஆள் கிடையாவிட்டால் எனது மொழி எனக்கே மறந்து போய்விடுமோ என்ற பயம் இருக்கிறது..
புலனற்ற சுழிக்குள்ளிலிருந்து விடுவித்து சற்றேனும் ஆசுவாசமாக இருக்க இணையத்தின் தமிழும் தமிழறிந்த மனிதர்களும் உதவுகிறார்கள்.
அவர்களுடனான என் தொடர்புகள் பயனுள்ளதாக இருக்கும் பொருட்டு எனது பங்களிப்பாக இதை எழுதத் தொடங்குகிறேன்.
அதாவது ஈழத்தின் வட்டாரப் பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களை ஊரில் வாழ்ந்த போது எந்த வகையில் பேசித் திரிந்தோமோ அதே அழகுடன் , அதே பாணியில் முடிந்த வரையில் ஒவ்வொரு சொற்களையும் அதன் விளக்கங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
எங்கள் வட்டாரப் பேச்சு வழக்கில் பெரும்பாலான வார்த்தைகள் பண்டைய தமிழ் சொற்களின் மருவலாகவும் வேறு சில பிறமொழிகளின் சொற்சேர்க்கைகளாகவும் இருக்கும். எல்லா வார்த்தைகளும் எங்கனம் தோன்றியது , எப்படி மருவியது அல்லது எந்தச் சொல்லிலிருந்து மருவியது என்று எல்லாம் எனக்கு விபரமாக தெரியாது. தெரிந்தவற்றை மட்டும் பகிர்கிறேன். பலவற்றை இணையத்தில் தேடி எடுத்தும் பகிர்கிறேன்.
பழகிய மொழி...பிறந்து வளர்ந்ததிலிருந்து பேசிய மொழியும் அதன் வார்த்தைகளையும் அப்படியே அதே இயல்புடன் சுமந்து திரிகிறேன். அவற்றை கூடிய வரையில் நல்ல ஒரு படைப்பாக தர முயற்சிக்கிறேன்.

Friday, March 20, 2015
ஒரு தாலி அறுப்பு !
சுன்னம் இடிக்கத் தொடங்கும் போதே சுற்றி இருக்கும் உறவுகளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போய்விடும். இனி என்ன இருக்கு என்ற ஒரு வெறுமை பரவத் தொடங்கும்..
மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு இனம் புரியாத விரும்பத்தகாத குளிர்ந்த பனிக்கட்டி ஒன்று உருண்டு பிரண்டு நெஞ்சுக்குள் அடைத்து உயிரோடிருக்கும் போதே ஜீவனற்றுப் போன விறைப்பான குளிர் உடம்பு முழுதும் பரவி மொய்த்துக் கொள்ளும்...
அப்படியொரு விரும்பி ஏற்றுக் கொள்ளாமலேயே எங்கள் வீட்டிலும்....நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது அன்று...
அப்பாவின் மூடிய கண்களின் மேல் தம்பிமார் மூவரும் இடித்த சுன்னம் மஞ்சளாக குழைத்து அவர்கள் கையாலேயே அப்பி விடும் அந்த வினாடி தான் அத்தனை நேரமும் அப்பா நித்திரை கொள்வது போலிருந்த மலைப்பு போய் அப்பா உயிரற்ற சடலமாகிவிட்டார் என்ற உண்மையை திணித்து கொள்ளும் பலவந்தம் , சொருகின வாளாக இதயச் சுவரிலும் அறிவுப் புதரிலும் இறங்கத் தொடங்கியது... அப்போது இயலாமையுடன் உடம்பும் மனமும் நிதர்சனத்தை ஏற்க மனமில்ல்லாமல் துடிக்கும் வலி இருக்கிறதே......வார்த்தைகளால் வர்ணிக்கவியலாது...
ஈமைக் கிரியைகள் எல்லாம் முடிந்த பின் எல்லாரும் அப்பாவைச் சுற்றி மாரடிக்கத் தொடங்கினார்கள்...வீல் என்று நானும் தம்பிமாரும் ஓலமிட்டோம்... அழுகையா அலறலா என்று இனம் புரியாத ஒலியில் உச்சச்தாயியில் அம்மா நெஞ்சு பிளக்கக் கூடாதா என்ற வெறியில் தன் கையால் தானே படார் படார் என்று குத்தி குழறினார்.. அப்பாவை கிடத்தியிருந்த பெட்டியைச் சுற்றி ஆஜானுபாகுவான ஆண்கள் பெட்டி மூடியுடன் வந்து ஆயத்தமாக நின்றார்கள்... உரிமைக்கார ஆண்கள் விரக்தியான பெருமூச்சுடன் பாடை தூக்க ஆயத்தமாக சால்வையை நாரியில் வரிந்து கட்டத் தொடங்கும் போதே , வயசான சில பெண்கள் அம்மாவை நோக்கி வந்தார்கள்...
அவர்கள் அம்மாவை பார்த்து அழுத படி மாரடிக்கிறார்கள்..
பெரியம்மாவுக்கு தாங்க முடியவில்லை..தாத்தா இறந்த பின் அம்மா உட்பட அத்தனை சகோதரங்களையும் தன் பிள்ளை போல் வளர்த்தது பெரியம்மா தான்...அம்மாவுக்கு அப்பாவை தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணி வைத்தார். அதை எப்பவும் பெருமையாக சொல்லிக் கொள்வார்... அப்படி தேடி பிடித்து கொடுத்த வாழ்கை இன்று பாலை வனமாகிப் போக தன் கண் முன்னாலேயே தன் தங்கைக்கு தாலி அறுக்கப் போகிறார்களே என்ற வேதனை , வலி, இயலாமை என்று எல்லாம் ஒன்றாகி அழுகை பெருக்கெடுத்து ஓலமாக ஒப்பாரியாக எதிரொலிக்கிரது.... பெரியம்மாவிடமிருந்து...!
இந்தக் கொடுமையை எல்லாம் பார்க்கவா நான் இன்னும் இருக்கிறன் என்று பெரியம்மாவின் அழுகை எல்லாருடைய மனதையும் அறுத்துப் போடுகிறது.
அம்மா தன் தாலியை கையால் இறுகப் பற்றிக் கொண்டு அழுகிறார். எல்லாரையும் பார்த்து கெஞ்சுகிறார்.. அர்த்தமில்லாமல் தன் தாலியை தன்னிடமிருந்து பறிக்க வேண்டாமெண்டு பிறத்தியாரிடம் மண்டாடுகிறார். அந்த கிழவிகள் அம்மாவின் கையை பலவந்தமாக இழுத்து அம்மாவின் கையிலிருந்த தாலியை கழற்ற முயற்சிக்கிறார்கள்... என்னால் பொறுக்க முடியவில்லை...அம்மாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற் கூட்டத்தில் முண்டியடிக்கிறேன்.. என்னை யாரோ பலமாக இழுத்து அந்தாலப் பக்கமாய் தள்ளிவிடுகின்றனர்... குமர் பிள்ளை யாம், அந்த இடத்தில் நிற்கக் கூடாதாம்...
சின்ன தம்பி ஓடி வந்து “ விடுங்கோ அம்மாவை விடுங்கோ..அவவை விடுங்கோ” என்று ஆவேசமாக கத்துகிறார்..
மூத்தவன் ”அம்மாவுக்கு விருப்பமில்லையெண்டால் ஏன் நீங்கள் வில்லங்கத்துக்கு கழட்டுறீங்கள்” எண்டு சீறிக் கத்தினான்...
நடுவிலான் தேம்பி தேம்பி அழுகிறான்.. என்னிடம் “ அப்பாவே அம்மாவுக்கு நடக்கும் இந்த கொடுமையை- கண்ராவியை விரும்ப மாட்டார்” என்று சொல்கிறான்...
அது எங்களுக்குத் தான் தெரியும். அப்பாவுடன் வாழ்ந்த நாட்களில் இன்றைய இந்தப் பொழுதைப் போன்ற கொடுமையில் ஒரு சத வீதம் தன்னும் அப்பா அம்மாவுக்கு கொடுத்ததில்லை.. அப்பா அம்மாவுக்கு கொடுத்த அவர்களுக்கிடையேயான தாம்பத்தியத்தின் அடையாளத்தை பலவந்தமாக அறுக்கும் உரிமையை ஆரோ ஊர் பேர் தெரியாத அன்னியர்களுக்கு யார் தந்தது? என்ற ஆவேசம் எனக்குள் பீறிடுகிறது...
அம்மா அழ அழ அவரின் தாலி அறுக்கப்பட்டது. தலையில் வைச்சிருந்த பூவை பறித்து கசக்கி நாலு பக்கமும் எறிந்தார்கள். குங்குமத்தை இரக்கமேயில்லாமல் அழித்தார்கள்... அம்மா தன் முகத்தை கைகளால் அறைந்து அறைந்து அரற்றுகிறார். பெரியம்மா அவரைக் கட்டிக் கொண்டு அழுகிறார்...
பறை உச்ச ஸ்தாயியில் முழங்கத் தொடங்க... நாங்கள் எல்லாரும் கதறக் கதற அப்பாவின் பெட்டி மூடப்பட்டு பாடையில் தூக்கி வைத்துவிட்டார்கள்... அம்மா மிகவும் களைச்சுப் போய் கீழே சாய்ந்துவிட்டார்... அம்மாவை திரும்பி திரும்பி பாத்தபடி கண்ணீர் வழிய கொள்ளிக்குடமும் நெருப்புச் சட்டியுமாய் தம்பிமார் மூன்று பேரும் தளர்ந்து போய் அப்பாவுக்கு பின்னால் நடந்தார்கள்...
அம்மாவின் கழுத்திலிருந்த தாலியை பத்திரமாக அந்தக் கிழவிகள் என்னிடம் தந்தார்கள்..
”இந்தா ராசாத்தி இதை கொண்டு போய் உள்ள வை.. ”
அந்த தாலியை வெறித்துப் பார்க்கிறேன்.
எத்தினை நகை நட்டு இருந்தும் என்ன ....அப்பா கட்டின ஒற்றை தாலி கழுத்திலிருந்து அறுக்கப்பட்ட பின் அம்மாவின் அடையாளத்தையே மாற்றிவிட்டது..
அம்மா இனி மூளி;விதவை; கைம் பெண்; முழிவியலத்துக்குதவாதவர்; நல்ல காரியங்கள் நடக்கும் போது பின்னால் நிற்க வேண்டியவர்; இதையெல்லாம் இந்த வினாடி அந்தக் கிழவிகள் அறுத்த என்னுடைய அப்பா என் அம்மாவுக்கு கட்டின தாலி சொல்லுகிறது.
அம்மாவுக்கு நெஞ்சிலும் மாரிலும் சுமந்த அப்பாவின் உறவு இனி இல்லை என்று சொல்லாமல் சொல்லியது. அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட சந்தோசமும், துயரமும் , உணர்வுகளும், உணர்ச்சிகளும் இனி எப்போதுமே கிடைக்காது என்பதை பறை சாற்றியது.
அம்மாவுக்கென்று இனி எதுவுமே அப்பாவால் இல்லை என்று தீர்ப்பு சொல்லியது..
இனி அது வெறும் விலையுயர்ந்த் உலோகம் மட்டும் தான். அதை உருக்கி ரெண்டு மூண்டு நகைகள் செய்யலாம்..ஆனால் அப்பா உயிருடன் இருந்த போது உயிர்ப்பாயிருந்த எந்தவொரு நல்லவிசயங்களையும் அந்த நகைகள் அம்மாவுக்கு திரும்ப தரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது. என்ர அம்மா அந்தளவு துடித்து சித்ரவதைப் பட்டு நான் பார்த்ததில்லை... உனக்கு உன்னுடைய புருசன் இனி இல்லை என்ற கொடூரமான உண்மையை தான் அம்மாவுக்கு மிச்சமாக விட்டு வைத்திருக்கிறது.... !
இப்பிடித் தான் எங்கட வீட்டில் ஒரு தாலி அறுப்பு நடந்தது...
ஆனால் இங்க என்னடாவெண்டால்.......விழா எடுத்து , மைக் செட் போட்டு தாலி அறுக்கினமாமே.....
Monday, March 9, 2015
நத்தைக்கூடுகள் சுமந்த காளிகள்... !
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 வருகிறது..!
போகிறது!! பெண்களுக்கான ஆர்ப்பரிப்புகளும், அவமானப்படுத்தலும். வாழ்த்துகளும் வசவுகளுமாக அந்த தினம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தாலும் தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு உன்னதமான தேவதையாகவும், சக்கரவர்த்தினியாகவும் நினைத்து பூரிப்படைய நினைக்கும் நாளாக பார்க்கிறாள்..மார்ச் 8 என்பது மகளிர்தினம் என்ற தகவல் தெரிந்தவளாயிருந்தால்....!
ஆனால் அவளாலேயே உணரப்படாத விசயம் இந்த நாள் அவளுடைய சமூகத்தில் அவளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கப்பட வேண்டிய நாள் என்பதை!!
தீபாவளி பண்டிகை, நத்தார், காதலர் தினம் போல் இந்த நாளும் கொண்டாட்டத்துக்குரிய நாளாக கருதும் எவரும் ஒரு வினாடி நின்று நிதானித்து பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்... மூளையின் செல்களை கசக்கி , நினைவுகளின் பக்கங்களை மேலே எடுத்து நடப்புகளின் வரிகளை கண் முன்னே கொண்டு வாருங்கள்.... அப்போது உங்கள் முன் விரியும் மிக அகண்ட கனன்ற நெருப்புக் குழிகளுக்குள்....உங்கள் சொந்தங்களில், உங்கள் நட்புகளில்...உங்கள் அயலில்...உங்கள் ஊரில்..உங்கள் நாட்டில்...உங்கள் அயல் நாட்டில்... உலகில்... எங்கெங்கெல்லாம் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும், கௌரவக் கொலைகளுமாய்...காட்சிகள்...
எப்போதுமே இசைப்பிரியாவின் உயிரற்ற உடல் உலுக்கிவிட்ட உணர்வுகளை தேற்றமுடியுமா??
எப்போதுமே விபூசிக்காவின் கதறிய முகம் கண்ணைவிட்டு மறையுமா??
எப்போதுமே பதில் கிடைக்காத, கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட் உலகின் மிக நீண்ட கால (16 ஆண்டுகளாக ) உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய பெண், யாருக்காக போராடினாரோ அதே மக்களாலேயே தேர்தலில் படுதோல்வியடைந்த பெண் இரோம் ஷர்மிளாவையும் மறைக்க முடியுமா??
36 வருடங்களாக வன்புணர்வின் போது கொடூரமாக தாக்கப்பட்டு . காயப்பட்டு கோமாவில் கிடந்து மடிந்து போன அருணா ஷண்பக், மேலும் கூட்டு வன்புணர்வுக்குட்பட்ட ஷக்தி மில், மற்றும் ஜோதி சிங் மட்டுமல்ல கல்பனா, உமா மகேஸ்வரி, வித்தியா , கிருசாந்தி உட்பட பல பாலகிகள் காலம் உள்ளவரை இந்த சமூகத்தின் மறைக்கவியலாத இரணங்களாக வடுக்களாகிப் போன அடையாளங்களாக இருக்கப் போகிறார்கள் என்ற வலிகளுடன் தான் ஒவ்வொரு மார்ச் 8ம் திகதியையும் முகமன் கூறுகிறோம் .
நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவோ அல்லது எங்களை மற்றவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவோ இந்த நாள் வரையறுக்கப்படவில்லை. இந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான அடையாள நாள் அவ்வளவே!
சமைக்கத் தெரியாத அல்லது ஒரே உணவை தினமும் சமைத்து தரும் மனைவியை கொண்டவர்களும், தாய்க்கும் மனைவிக்குமிடையில் மாட்டிக் கொண்டு முழி பிதுங்குபவர்களும்,காதலில் ஏமாற்றப்பட்டவர்களும் அல்லது வெறுமனே பெண்களை கிண்டல் பண்ணுவதில் சந்தோஷிக்கும் ஆண்களுக்கும் இந்த நாள் கேலிக்குரியவொன்று தான். பெண்களின் தகுதி தெரியாதவர்கள் எவருக்குமே இது கேலிக்குரிய தினம் தான்,
ஒவ்வொரு இசைப்பிரியாவும், விபூஷிக்காவும், கிருசாந்தியும், ஜோதி சிங்கும் , ஷக்தி மில்லும், அருணா ஷண்பக்கும், இரோம் ஷர்மிளாவும் போல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மனைவி, அம்மா , மகள், சகோதரி என்ற பெயரில் வெறும் சமையல்காரியாக, சலவைக்காரியாக, பிள்ளை பெறும் இயந்திரங்களாக , உழைத்துக் கொட்டும் ஏ.டி.எம் மெஷின்களான பெண்களும் இந்த மார்ச் 8ம் திகதியை அடையாளப்படுத்துபவர்கள் ...!
இது யாதுமாகி அனைத்துமாகிய காளி நீ என்று போற்றப்பட்டுக் கொண்டே புரட்டி எடுக்கப்படும் சமூகத்தின் ஒரு பிரிவின் தேவையை உணர்த்தி அதற்கெதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாள நாள் மட்டுமே!!
ஐநா கணக்கெடுப்பு அது இது என்று ஆதாரங்கள் திரட்டி, கௌரவக் கொலைகள் முதல், வன்புணர்வு வரை சமூக ரீதியாகவும், அரசியல், இன, மத வெறி மூலமாகவும், குடும்ப ரீதியாகவும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைப் பற்றி எழுதுவதும் பாடுவதுமாய்...........பொது
இந்த போராட்டங்களில் உறுதி எடுக்கப்பட்ட கணத்தின் உடல் வலிமையும், சூழ் நிலையின் சுதந்திர விரிவும் படிப்படியாக குறைந்து போய்க் கொண்டே இருக்கிறது...அடுத்த வருடம், அதற்கடுத்த வருடம்...இதோ இந்த வருடமும் வந்துவிட்டது... வருடா வருடம் வெவ்வேறு விதமான சுமைகளும், நோய்களும்,இடர்களும்,தடைகளு
ம்ம்ஹூம்....எந்த மாற்றத்தையும் சாதிக்க முடியவில்லை; எந்த விபத்தையும் ,எந்த கொடுமையையும் நிறுத்த இயலவில்லை.. எந்த பெண்ணையும் காப்பாற்ற முடியவில்லை... உதவ முடியவில்லை... எந்தப் பெண்ணுக்காகவும் கொடுத்த குரல் வெளியில் கேட்கப்படாமலேயே அமுங்கிப் போய்விட்டது...அல்லது செவிமடுக்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.. என்பதை வேதனையுடன் நீ என்ன செய்து கிழித்தாய் என்ற பாரிய வினாவின் முன் தலைகுனிந்து பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது .
நத்தைகளுக்கு மத்தியில் விசம் கக்கும் நச்சுப் பாம்புகளுக்கும் தெரியாமல் இடம் கொடுத்துவிட்டோமல்லவா ?? பாம்புகளை நம்பி பின்னால் ஊரும் நத்தைகளும் ஒரு முனைப்பில் பாம்புகளாக மாறும் என்ற எச்சரிக்கையுடன் இனியாவது இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மட்டும் கற்றுக் பெண்கள் கொள்ள வேண்டும் !!
இந்த நாளுக்கான வாழ்த்து சொல்லவும் வாழ்த்தைப் பெறவும் தகுதியில்லாத குற்ற உணர்வு உள்ளிருந்து அழுத்துகிறது.
Subscribe to:
Posts (Atom)