இன்றைய தேர்வு பதிவின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்த
இழை தொடங்கியதும் எனக்கும் என்னுடைய இணையச் சகோதரர் ஒருவருக்குமிடையில்
நடந்த உரையாடலின் சாரத்தை விளக்கமான பதிவாக எழுத நினைத்தேன்.. ஆனால் பதிவாக
எழுதுவதை விட உரையாடலை அப்படியே தந்தால் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்
என்று புலப்பட்டது. அதன் விளைவு இந்த பதிவு.
எங்கள் பேச்சு
வழக்கிலும் தமிழகத்தின் மற்ற பாகங்களிலும் உபயோகத்தில் இருக்கும்
வார்த்தைகளான நாங்கள் , நீங்கள், எங்கள் என்ற வார்த்தைகளை ஈழத்தமிழர்
உபயோகிக்கும் விதத்திற்கும் அந்த உரையாடலில் பங்குபெறும் தமிழக தமிழர் அதை
எடுத்துக் கொள்ளும் விதத்திலும் பல தடவை எனக்குள்ளும் என்னுடன் உரையாடிய
தமிழக தமிழர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல் தம்பி பாலாஜி
பாஸ்கரன் தன்னுடைய நண்பர்களான ஈழத்தமிழர் ஒருவரின் வீட்டுக்கு விசிட் போன
போது இதே போல் நாங்கள் நீங்கள் எங்கள் வார்த்தைகளையிட்டு குழம்பிப் போனார்.
ஒரு நாள் அவருக்கும் எனக்குமிடையில் நடந்த “ நாங்கள், நீங்கள் , எங்கள்”
என்ற வார்த்தைகள் பற்றிய உரையாடலை அப்படியே இங்கு தருகிறேன். நீங்களும்
குழம்பலாம் அல்லது தெளிவடையலாம். smile emoticon smile emoticon
******************
நாங்கள் - We / We are/ நாங்க
நீங்கள் - You / நீங்க
எங்கள் - Our /நம்ம
எங்களுக்கு- Us / நமக்கு
**************************
Balaji Baskaran :
நாங்கள் எங்கள் இதை
எப்படி பயன்படுத்துகிறீர்கள்
என சொல்லுங்கோ
எங்களுக்கும் உங்களுக்கும் ரொம்ப குழப்பம்
இதன் பயன்பாட்டில்
Swathi Swamy :
புரியவில்லை தம்பி
நாங்கள் - We
எங்கள் - Our
இந்த இரண்டையும் நீங்களும் அப்படித் தானே பயன்படுத்துகிறீர்கள்?
Balaji Baskaran:
haa haa haa
ஆமாக்கா
Swathi Swamy:
அப்புறம் என்ன?
Balaji Baskaran:
உங்க இலங்கைத் தமிழர்கள் பேச்சுக்கும் எங்க பேச்சுக்கும்
உள்ள வேறுபாடு சொல்றேன் கேளுங்க
Swathi Swamy:
சொல்லுங்கோ smile emoticon
Balaji Baskaran:
நீங்க ,நான், மாமா எல்லாரும் ஒரு இடத்துல பேசிக்கிட்டு இருக்கோம்
சரியா?
Swathi Swamy :
ஓகே
Balaji Baskaran:
நாங்கள் சினிமாவுக்குப் போவோம்னு நீங்க சொல்றீங்க
Swathi Swamy:
சரி
Balaji Baskaran:
அப்படினா நீங்க ரெண்டு பேரு மட்டும் போறீங்கனுதான் எனக்குப் புரியும்
உங்க மொழில மூனு பேரும் போவோம் என்று சொல்வீர்கள்
Swathi Swamy:
நான் நீங்க.ள் அவர் இருக்கும் போது எல்லாரையும் சேர்த்து தான் நாங்கள்
என்கிறோம்.. அதாவது உங்களையும் எங்களோடு சேர்த்தே சொல்கிறோம்
Balaji Baskaran:
ம்ம்ம்ம்
எங்களுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும்னு தான் புரியும்
இதையே நாங்க எப்படி சொல்லுவோம் தெரியுமா?
Swathi Swamy:
ம்ம் இப்ப புரியுது.. சரி அப்ப நீங்கள் எப்படி அதை சொல்வீர்கள்?
சொல்லுங்கோ
Balaji Baskaran:
நாம சினிமாவுக்குப் போவோம்
Swathi Swamy:
smile emoticon நாம என்றால் நாங்கள் தானே?
Balaji Baskaran :
ஆமாக்கா
ஆனா நீங்க நானு உங்களுக்கு வேண்டியவர் இருக்கும் போது நாங்கள் என்று நீங்க சொல்லும் போது
நீங்கள் ரெண்டு பேர் மட்டும்னு தான் புரியும்
Swathi Swamy:
சரி.. இப்ப நான், நீங்கள், பிராணநாதர், ஜோ எல்லாரும் ஒரு இடத்தில் இருக்கிறோம்..
Balaji Baskaran :
ஹா ஹா ஹா இதனால ரொம்பகுழம்பியிருக்கேன் தேனுசா வீட்டுல
Swathi Swamy:
நான் உங்கள் நாலு பேரையும் ஒருமித்து சுட்டுவது என்றால் நீங்கள் என்று சொல்வேன் அல்லவா?
அதை எப்படி சொல்வீர்கள்? நீங்க ந்னு தானே?
Balaji Baskaran :
நீங்கள்தான்
Balaji Baskaran:
எங்கள் பற்றி சொல்றேன்
கேளுங்க
நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
Swathi Swamy :
ஒரு தடவை நான் தமிழ் பிரவாகம் குழுமம் தொடங்கின புதுசுல எங்கள்
குழுமம் , எங்கள் குழுமம் என்று எழுதினதை ஒருவர் கண்டித்து எழுதினார்..
அதென்ன இத்தனை பேரையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குழுமம் உங்களோடது
மட்டும்ன்னு சொல்லுறீங்க என்று
ஏன் என்று இன்று வரை புரியவில்லை
Balaji Baskaran :
அதேதான்
பெரிய வேறுபாடு இருக்குக்கா
என்னடா நம்மள வச்சிக்கிட்டே இப்படி சொல்றாங்களேனு தோணும்
சிக்கன் மேட்டருக்கு வாரேன்
எங்கள் பற்றி சொல்றேன் கேளுங்க நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
இங்க ஸ்வாதி சொல்றாங்க
எங்களுக்கு கடைசியா சிக்கன் வச்சிருக்காங்க
அப்படினா நீங்க சொல்றது 4 பேருக்கும் கடைசியா வச்சிருக்காங்க
சரியா?
Swathi Swamy:
ஆமாம்
Balaji Baskaran :
எங்களுக்குப் புரிவது, உங்க ரெண்டு பேருக்கு மட்டும் கடைசியா வச்சிருக்காங்க
இதையே நாங்க எப்படி சொல்லுவொம்னா
நமக்கு சிக்கன் கடைசியா வச்சிருக்காங்க
Swathi Swamy:
ஓஒ
Balaji Baskaran:
நாங்கள் - நாம் வேறுபாடு
எங்கள் - நம் வேறுபாடு
Swathi Swamy:
அதான் அதை எப்படி விளக்கமாக எழுதுவது என்று ரொம்ப பிரச்சினையா
இருக்கிறது. இது பற்றி கணேசன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கலந்து பெசி தான்
விளக்கமாக எழுத வேண்டும்.
Balaji Baskaran :
சரிங்க அக்கா
உங்க பேச்சுல நீங்க நல்லாத்தான் பேசுவீங்க
ஒரு அறையில் படுத்திருக்கோம்
கொசு கடிக்குது
காலைல சொல்றீங்க
ஸ்வாதி : “எங்களுக்கு கொசு கடிச்சது”
பாலாஜி : “ஐய்யே, அப்ப எங்களுக்கு தாலாட்டா பாடுச்சு, எங்களையும்தான் கடிச்சிச்சு”
Swathi Swamy :
நீங்க நினைப்பீங்க எங்களுக்கும் தானே கொசு கடிச்சுதுன்னு
ஹஹஹஹஹ்
Balaji Baskaran:
ஹா ஹா ஹா
நாலு பேரும் வேர்வையில் நனைஞ்சு போயிட்டோம் கரண்ட் இல்லாம
Swathi Swamy:
ஆனா அவங்க உங்களையும் சேர்த்து தான் சொல்றாங்க
நமக்கு கொசு கடிச்சிருச்சுன்னு சொல்லனும் உங்க வழக்கில
Balaji Baskaran :
நாங்கள் வேர்வையில் நனைஞ்சிட்டோம்னு எங்கிட்ட சொன்னா
அப்ப நான் மட்டும் குளிர்ல நடுங்கினேனானு தோனும்
Swathi Swamy:
smile emoticon
Balaji Baskaran:
நம்மை விட்டு மூன்றாம் பேருடன் பேசும் போது நாங்கள் எங்கள் சரியா இருக்கும்
Swathi Swamy :
விளங்குது... ம்ம்ம்ம்
Balaji Baskaran:
நமக்குள்ளே பேசும் போது நாம் நம் சரியா இருக்கும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நன்றி அக்கா
Swathi Swamy:
smile emoticon நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேணும்
இதை எப்படி எல்லாருக்கும் விளங்கிற வகையில எழுதி முடிக்கிறது என்பது தான் இப்ப பிரச்சினையே எனக்கு..
பேசாமல் உக்களுடன் இப்ப பேசினதையே காப்பி & பேஸ்ட் செய்து போட்டுடலாம் என்று நினைக்கிறேன் smile emoticon
Balaji Baskaran:
சரிங்க அக்கா
பட் டிங்கரிங் பார்த்துப் போடுங்க
Swathi Swamy:
ஓஒமோம்..
Balaji Baskaran:
நம்மை விட்டு மூன்றாம் நபரிடம் பேசும் போது நாங்கள் எங்கள்
நமக்குள்ளே பேசும் போது நாம் நம்
இது எங்கள் வழக்கம்
உங்களுடையது
நாங்கள் எங்கள்
அதான் குழப்பம்...
Swathi Swamy :
ஆமாம்.
Balaji Baskaran :
இன்னொரு நண்பரிடம் கேட்குறேனு சொன்னீங்களே
கேட்டுட்டு விளக்கமா போடுங்க
நம்ம பதிவை பார்த்து மேற்கொண்டு மத்தவங்க குழம்பிடாம smile emoticon
Swathi Swamy :
அதே தான்
நன்றி தம்பி. வணக்கம்.
****************************
இந்த உரையாடல் புரிய வைப்பது என்னவென்றால்
உதாரண வாக்கியங்களாக ..
1) நாங்கள் சினிமாவுக்கு போகப் போகிறோம்.
(நாம சினிமாவுக்கு போக போகிறோம்.)
2) எங்களை நுளம்பு நல்லா கடிச்சிட்டுது.
(நம்மை கொசு நல்லா கடிச்சிடிச்சு)
3) எங்களுக்கு பசிக்குது
(நமக்கு பசிக்கறது)
அதாவது :
ஈழத் தமிழில் :
நான் + நீ = நாங்கள் அல்லது நாம்
தமிழகத் தமிழில் : நான் + என்னைச் சார்ந்தவர்கள் மட்டும் = நாங்கள்.
ஈழத்தமிழில் : என்னுடையது + உன்னுடையது = எங்களுடையது. அல்லது நமது
No comments:
Post a Comment