“First they came for the communists, and I did not speak out—
because I was not a communist;
Then they came for the socialists, and I did not speak out—
because I was not a socialist;
Then they came for the trade unionists, and I did not speak out—
because I was not a trade unionist;
Then they came for the Jews, and I did not speak out—
because I was not a Jew;
Then they came for me—
and there was no one left to speak out for me.”
― Martin Niemöller
எங்கள் வீடுகளிலும் இப்படித் தான் எங்கள் அம்மாக்கள் நினைவிழந்து மூர்ச்சித்து வீழ்ந்தார்கள்..!
எங்கள் பிள்ளைகள் தங்கள் அப்பாக்களை இழந்து, அண்ணன் தம்பிகளை இழந்து வெம்பி வெதும்பிப் போய் திக்கித்துப் போய் நின்றார்கள்.!!
இளம் மனைவிகள் விதவைகளாகி வெள்ளை சேலை கட்ட வைத்த பின் எங்களுக்கு சமாதானக் கொடியின் நிறம் மறந்து போய்விட்டது. !!
எங்கள் நெற்றிப் பொட்டுகள் கழுவப்பட்ட போதுகளில் எங்கள் மனதில்
துளிர்விட்ட உணர்வுகளின் வடிகால்கள் எதை நோக்கி வழிநடந்தனவோ ......அதே
உணர்வுகளின் சின்ன துளிர்கள் இப்போது உங்கள் மனதிலும்
முளைவிட்டிருக்குமே....??
உங்களுக்காவது செத்தவீடுகள் கொண்டாட இடமும், பூதவுடல் பத்திரப்படுத்த பிரேதப் பெட்டியும் கிடைத்திருக்கிறது.. !!
ஆனால் செத்த இடத்திலேயே புதைக்கவோ, எரிக்கவோ முடியாமல் அனாதைகளாக
பெற்றோர்களை, பிள்ளைகளை பிணங்களாகப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிய
அவலங்கள்.... வீட்டு வளவுகளையே எங்கள் உறவுகளை எரிக்கும் மயானங்களாக்கிய
கொடுங்காலங்கள் வாழ்நாள் முழுவதும் சீழ் வடிந்த ரணங்களாக சுமந்து
கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் எங்கள் மரணங்களை கொண்டாடிய உங்கள்
வீடுகளில் அதே அவலங்களை பரிசளித்திருக்கிறார்கள் உங்களவர்கள்....!!
இப்போதாவது புரியுமா எங்கள் இழப்புகளின் வலிகள் உங்களுக்கு..என்று ஒரு
வினாடி யோசிக்க வைத்தாலும் , பொது நாகரீக வேடதாரிகளைப் போல் உங்களுக்காக
பரிதாபப்படுகிறேன் , துடித்துப் போகிறேன் என்று பொய்சொல்ல முடியவில்லை
....எனினும் மனதின் ஒரு மூலையில் வலிக்கத் தான் செய்கிறது....!!
No comments:
Post a Comment